இருவரும் காதலிப்பது உண்மையா? குக்வித்கோமாளி சுனிதா வெளியிட்ட புகைப்படம்
குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சந்தோஷ் பிரதாப், சுனிதா குடும்பத்துடன் உள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் டூ குக்வித்கோமாளி
தமிழில் சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சந்தோஷ் பிரதாப், அப்படங்கள் பெரிய வரவேற்பை பெறாத போதிலும், பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து சின்னத்திரையில் குக்வித்கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார், அதில் கோமாளியாக வந்த சுனிதாவுடன் நல்ல நட்பு உருவானது.
இருவரும் அடிக்கடி இணைந்து ரீல்ஸ் செய்வது வழக்கம், திடீரென ஒருநாள் சுனிதாவின் பின்னால் ரொமாண்டிக்காக சுற்றுவது போல் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்த சந்தோஷ் 'சர்ப்ரைஸ்... காத்திருங்கள் புதிய ப்ராஜெக்டின் அப்டேட்டிற்காக' என்று பதிவிட்டிருந்தார்.
சுனிதாவுடன் நட்பு
அந்த வீடியோவை பார்த்த பலரும் சுனிதாவும் சந்தோஷூம் காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றுள்ள சுனிதா அங்கே தன் குடும்பத்தாருடன் கோயிலுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், சந்தோஷ் பிரதாப்பும் உடன் நிற்க உண்மையில் காதலிக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் ஜோடி பொருத்தம் பிரமாதம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.