36 வயசுல கூட இப்படி இருக்காங்களே? குக்வித் கோமாளி புகழ் ஸ்ருத்திகாவின் வைரல் போட்டோஸ்
குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே இரவில் உலகப்புகழ் பெற்றுள்ளார் ஸ்ருத்திகா.
பிரபல நடிகரின் பேத்தி
பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருத்திகா, 2002ம் ஆண்டு சூர்யாவின் ஸ்ரீ படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஸ்ருத்திகா, முதல் படமே தோல்வியடைந்தது.
தொடர்ந்து ஆல்பம், தித்திக்குதே, நள தயமந்தி படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படி புகழ் கிடைக்கவில்லை.
இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஸ்ருத்திகா, அர்ஜீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
குக்வித் கோமாளி பிரபலம்
இந்நிலையில் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக்வித்கோமாளி சீசன் 3ல் கலந்து கொண்டுள்ளார், இந்நிகழ்ச்சியில் அறிமுக விழாவிலேயே ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஸ்ருத்திகா.
இவரது சமையலுக்காக மட்டுமின்றி சிரிப்பை ரசிக்கவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கிறது, ஏராளமான ஆர்மிகளும் உருவாகி விட்டது.
இதற்கிடையே சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
36 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கீங்களே? உங்களது வெள்ளந்தியான மனம் தான் காரணம் என புகழ்கின்றனர் ரசிகர்கள்.
கனடாவில் படிப்பை முடித்த விஜய் மகள்
