பிரபல நடிகருடன் Video Call.. அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த சிவாங்கி- என்ன சொல்கிறார்?
CWC சிவாங்கியின் புகைப்படங்கள் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகி வருகிறது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி.
பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராக மாறி விட்டார்.
இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே தொடங்கிவிட்டார்.
அடுத்தக்கட்டத்திற்கு நகர்வு
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.
அந்த வகையில், பிரபல மலையாள நடிகர் பேசில் ஜோசப்புடன் வீடியோ கோல் பேசிய புகைப்படத்தை ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குவதால், “அடுத்தக்கட்டத்திற்கு நகர்வு..” எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், சிவாங்கிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

