குக் வித் கோமாளியின் புது நடுவர் இவர்தானாம்.. ப்ரோமோவில் மாஸ் என்ட்ரி
பிரபல தொலைக்காட்சி குக் வித் கோமாளி சீசன் 6-ல் புதிய நடுவரை அறிமுகம் செய்துள்ளது.
சீசன் 6 ஆரம்பம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குடும்ப பெண்களின் அதிக கவனத்தை தொட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.அத்துடன் இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஆறாவது நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.
புதிய நடுவரா?
விரைவில் குக் வித் கோமாளி சீசன் 6 தொடங்கவுள்ள நிலையில், இதுவரையில் நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு இருந்தார்கள். தற்போது 6 ஆவது சீசனில் மூன்றாவதாக செஃப் கௌசிக் இணைந்துள்ளார்.
இந்த தகவலை ப்ரோமோ வெளியிட்டு விஜய் தொலைக்காட்சி நிறுவனம் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல விலைக்கு விற்று விட்டதால், வழக்கமாக ஒளிபரப்படும் நிகழ்ச்சிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
