தாயாக மாறிய மணிமேகலை... கையில் குழந்தையுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சி
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான மணிமேகலை தாயாக மாறி குழந்தை ஒன்றினை கொஞ்சும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி மணிமேகலை
பிரபல ரிவி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. தற்போது 4ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொண்ட இவர் திடீரென வெளியேறினார்.
இவரது வெளியேற்றத்திற்கான காரணம் தற்போது என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில், கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு மணிமேகலை வெளியிடவில்லை.
அதன் பிறகு தங்களின் ஃபார்ம் ஹவுஸ் கட்டுமான பணிகளில் மணிமேகலையும் அவரது கணவர் ஹுசைனும் பிஸியாக உள்ளனர். பின்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
காதல் திருமணம்
மணிமேகலை பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்துக்கு பின்பு தனது பாதையில் அசுர வளர்ச்சி கண்ட இவர், கணவருடன் சேர்ந்த யூடியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகின்றார்.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று இந்த ஜோடிகளை பேன்ஸ் மீட் ஒன்றினை நடத்தி இருவருக்கும் டாஸ்க் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
குழந்தை ஒன்றை கொடுத்து அதற்கு ஆடையணிந்து விடுமாறு கூறிய நிலையில், டிரஸ் மாட்டி விடுமாறு ஹுசைன் மணிமேகலை ஜோடிக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.
குழந்தையுடன் கொஞ்சிய மணிமேகலை
குழந்தையை வாங்கிய மணிமேகலையிடம் உடனே அழதொடங்கியது. பின்பு ஹுசைனிடம் சென்று அழுகையை நிறுத்தியதால் அவர் பயங்கர மகிழ்ச்சியடைந்தார்.
இதைப் பார்த்து கடுப்பான மணிமேகலை குறித்த குழந்தையிடம் செல்லமாக சண்டையிட்டு, பின்பு உண்மையான தாயாக மாறி அக்குழந்தையினை கவனித்துக் கொண்டார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் விரைவில் உங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
