CWC: கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவரா? ரசிகர்கள் கவலை
சின்னத்திரை நட்சத்திரங்களை கொண்டு நடத்தப்படும் ரியால்டி ஷோக்களுக்கு என்றுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பது மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்வித்கோமாளி நிகழ்ச்சிக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
குக் வித் கோமாளி சீசன் 6
குக்கு-களுடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. கடந்த சில சீசன்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தற்போது நடந்து வரும் சீசன் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
இதில் கஞ்சா கருப்பு, பிரியா ராமன், ஷபானா, மதுமிதா, ராஜீ , உமைர் லத்தீப், சுந்தரி, நந்தகுமார் உட்பட பத்து பேர் கலந்து கொண்டனர்.
நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், தாமு மற்றும் கௌசிக் உள்ளனர். கோமாளிகளின் தொல்லைகளை சமாளித்து குக்-குகள் சமைக்க ஒரே அதகளம் தான், இந்த போட்டியில் இருந்து முதலாவதாக சௌந்தர்யா சிலுகுரி, இரண்டாவதாக கஞ்சா கருப்பு, மூன்றாவதாக சுந்தரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
எலிமினேஷன் ரவுண்ட்
மூன்று பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், நான்காவது நபரை வெளியேற்றுவதற்கான போட்டி இந்த வாரம் நடைபெற்றது.
குக்வித் கோமாளி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சமையலுக்கு தேவையான அறையை மூடினர், அதற்கு பதிலாக சீக்ரெட் பாக்ஸ் என்கிற பெட்டியை நடுவர்கள் கொடுத்தனர்.
அதில் இருக்கும் பொருட்களை கொண்டு மட்டுமே சமைக்க வேண்டும், இந்த சுற்றின் இறுதியில் ராஜூ ஜெயமோகன், நந்தகுமார், மதுமிதா மற்றும் ஷபானா ஆகிய நான்கு பேரும் டேஞ்சர் சோனில் இருந்தனர்.
கண்ணீருடன் வெளியேறிய மதுமிதா
கடந்த வார சுற்றுகளின் மதிப்பெண்களையும் கருத்தில் கொண்டு, இறுதியாக மதுமிதா வெளியேற்றப்பட்டார்.
போட்டியின் தொடக்கத்தில் மூன்று நடுவர்களிடம் இருந்து 10 மதிப்பெண்கள் பெற்ற போட்டியாளர் மதுமிதா தான், இவரின் எலிமினேஷன் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
மதுமிதா கண்ணீருடன் வெளியேறியது சமூகவலைத்தளங்களிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.