தம்பிக்கு தாயாக மாறிய மாறிய அண்ணன்: பாசத்தை தூண்டும் வைரல் வீடியோ
பொதுவாகவே ஒரு வீட்டில் அண்ணன் தம்பி என்று இருந்தால் கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துக் கொண்டே தான் இருக்கும்.
என்னதான் எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டாலும் எதாவது பிரச்சினை வந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அப்படி இரு அண்ணன்-தம்பிகளின் பாசத்தை கொண்டாடும் வீடியோ ஒன்றுதான் இது.
இந்த வீடியோவில் தாய் தனது இரண்டு மகன்களுடன் தூங்கிக் கொண்டிருக்கையில், பெரிய இடி சத்தத்தைக் கேட்டு குட்டி தம்பி எழுந்து அழுதுக் கொண்டிருக்கிறான்.
தாயும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளையில், குழந்தையின் அண்ணன் எழுந்து வந்து தம்பியை தட்டி தட்டி தூங்க வைத்து விட்டு தாய்க்கும் போர்வையை எடுத்து போர்த்தி விடுகிறான்.
இந்த குட்டிப் பையனின் செயலைப் பார்க்கும் போது இப்போதிருக்கும் சிறுவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |