கறிவேப்பிலை மிளகு சாதம் செஞ்சி பாருங்க: அப்பப்பா என்னவொரு சுவை
பொதுவாகவே கறிவேப்பிலை மிகவும் சத்துமிக்க ஒன்றாகும், முடி வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
அதிலும் கறிவேப்பிலை மற்றும் மிளகு என்பவற்றில் சாதம் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும். மிகவும் அருமையாக இருக்கும்.
இனி கறிவேப்பிலை மிளகு சாதம் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - seasonal flavered
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கப்
சாதம் - 1 கப்
மிளகு - 2 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
தாளிக்க
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
image - nams corner
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும். பின்னர் ஒரு வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கருகவிடாமல் வறுக்க வேண்டும்.
அதன்பின்னர் பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். பின்னர் அடுப்பை நிறுத்தி கடைசியில் கல் உப்பை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதன் பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.
அதன் பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
தாளித்தவற்றை சாதத்தில் சேர்த்து, அதில் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை, மிளகு பொடியைப் போட்டு கலக்கவும்.
சத்துமிக்க கறிவேப்பிலை மிளகு சாதம் தயார்.
image - you tube