கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை சூப்
FOOD
By Nivetha
தினமும் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளும் தீரும். இன்று கறிவேப்பிலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை - 2 கப்
- மிளகு - 2 ஸ்பூன்
- சீரகம் - 2 ஸ்பூன்
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- பூண்டு - 4 பல்
- சர்க்கரை - 1 டீஸ்பூன்
- வெண்ணெய் - 6 டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில் 2 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து ஆறவிடவும்.
- நன்கு ஆறியதும் அவற்றை மிக்சியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, பூண்டை போட்டு வதக்கி ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்
- .
அரைத்த விழுது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அதனுடன் பொடித்த பொடி, சர்க்கரை, மீதமுள்ள வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கொதித்ததும் இறக்கி வடிகட்டி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான கறிவேப்பிலை சூப் ரெடி.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US