வீட்டுல கறிவேப்பிலை அதிகமா இருக்கா? அப்ப ஒருமுறை இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
கறிவேப்பிலையை தூக்கி வெளியே போடும் நபர்களுக்கு அருமையான கறிவேப்பிலை சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்திய உணவுகளில் காலை நேரத்தில் இட்லி, தோசை வகைகள் தான் அதிகமாக சாப்பிடுகின்றனர். இதற்கு விதவிதமான சட்னிகளும் செய்வார்கள்.
அதில் தற்போது நாம் தெரிந்து கொள்ளப் போவது கறிவேப்பிலை சட்னி ஆகும். பொதுவாக கறிவேப்பிலை சட்னியில் சற்று கசப்பு தெரியும்.
ஆனால் அப்படி எந்தவொரு கசப்பும் தெரியாமல் கறிவேப்பிலை சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 5
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 2 கைப்பிடி
தக்காளி - 2
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கறிவேப்பிலையை நீரல் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்பு அதனுடன் வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின்பு, வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
பின் அதில் கறிவேப்பிலையை சேர்த்து, சுருங்கும் வரை வதக்க வேண்டும். தொடர்ந்து தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கவும்.
மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து சிறிது நீர் சேர்த்து கொகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |