சூடான சாதத்துடன் கறிவேப்பிலை தொக்கு - இப்படி செய்து கொடுங்க
வீட்டில் கறிவேப்பிலை நிறைய இருக்கும் போதெல்லாம் இந்த தொக்கை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள் சுவையாக சாப்பிடவார்கள். ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இந்த தொக்கு நறுமணத்துடன் சாப்பிடவே சூப்பராக இருக்கும். கறிவேப்பிலை செரிமானத்தை மேம்படுத்தவும், முடி ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவும்.
மேலும், வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது. இவ்வளவு நன்மை கொண்ட கறிவேப்பிலையில் தொக்கு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
கறிவேப்பிலை தொக்கு தேவையான பொருட்கள்
செய்யும் முறை
முதலில் புளியை சிறிது தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதன் பின்னர் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுக்கவும்.
இவற்றை ஆறவைத்து, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும் . பிறகு, கெட்டியான புளி சாற்றை பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் சுத்தம் செய்து, கறிவேப்பிலை எடுத்து அதை அரைத்து கொள்ளவும். இதை அரைத்து எடுக்கும் போது மிகவும் கெட்டியாக இருப்பது அவசியம்.
பின்னர் 1 தேக்கரண்டி எண்ணெயுடன் பாத்திரத்தை சூடாக்கி, கடுகு, நறுக்கிய மிளகாய் மற்றும் பெருங்காயத்தைத் தூவி, வதக்கவும். பின்னர் அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
மேலும் கெட்டியாகும் வரை அதை நன்றாக வெகவைத்து கிண்டி கொள்ளவும். இதன் நிறம் மாறும். அதன் பிறகு, தேவைக்கேற்ப அதிக எண்ணெய் சேர்க்கவும் .
பின்னர் அதில் இன்னும் கொஞசம் எண்ணெய் சேர்த்து வேக வைக்க வேண்டும். உங்களுக்கு அதன் பருவம் நல்ல கெட்டியாக இருக்கின்றது என தெரிந்து விட்டால் அடுப்பை அணைக்கவும். இதை நன்கு ஆறவைத்து, காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். இதை இட்லி தோசை சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
