ராதிகாவால் தள்ளுவண்டி வியாபாரத்தில் இறங்கிய கோபி.. ஷாக்கில் பாக்கியலட்சுமி ரசிகர்கள்!
ராதிகாவால் தள்ளுவண்டி வியாபாரத்தில் இறங்கிய கோபியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது,
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
அந்த வகையில் பாக்கியாவின் இரண்டாவது மருமகள் அமிர்தா குழந்தையுடன் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட எழில், அமிர்தாவை காதலித்து பல இன்னல்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்கிறார்.
ஆரம்பத்தில் பாக்கியாவின் வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். அத்துடன் நிலாவையும் அவர்கள் வீட்டு பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் அமிர்தாவின் முதல் கணவரின் வருட தேவை வருகின்றது. அப்போது எதிர்பாராத விதமாக கணேஸ் அதிரடியாக என்றி கொடுக்கிறார்.
கோபியின் தற்போதைய நிலை
இப்படியொரு பக்கம் கதை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கையில், ராதிகாவால் கோபி பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வருகிறார்.
தினமும் சண்டை என்று நிம்மதியில்லாமல் வாழும் கோபி சீரியலில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறாரோ அதே ஆர்வத்தை அவரின் சமூக வலைத்தளங்களிலும் காட்டி வருகிறார்.
அந்த வகையில் தள்ளு வண்டியில் காய்கறி விற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ ராதிகாவால் தள்ளுவண்டி வியாபாரத்திற்கே வந்துட்டீங்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |