சேலைக்கு ஓய்வு கொடுத்த ரக்சிதா.. சினிமாவிற்காக போட்டிருக்கும் புது கெட்டப்- புகைப்படங்கள்
சினிமாவிற்காக புது கெட்டப்பில் ரக்சிதா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரக்சிதா மகாலட்சுமி
நடிப்பில் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி இறுதியாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து பிரபல்யமாகியவர் தான் நடிகை ரக்சிதா மகாலட்சுமி.
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியலில் சின்னத்திரைக்கு என்றி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் ரட்சிதாவிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகினார்.
புது கெட்டபில் வெளியான புகைப்படங்கள்
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து வெளியில் வந்த பின்னர் சின்னத்திரை வாய்ப்பில்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில், இவ்வளவு நாள் சேலையில் இருந்த ரக்சிதா தற்போது தன்னுடைய புது படத்திற்காக பொலிஸ் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை திரைப்படத்தின் பெயர் குறிப்பிடாமல் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த பிரபலங்கள், “ இது நம்ம ரக்சிதாவா? என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |