3 நிமிடத்தில் 3 கிலோ தயிர் சாப்பிட்டு சாதனை! முதியவரின் அசத்தலான செயல்
இந்திய மாநிலம் பீகாரில் நடைபெற்ற தயிர் சாப்பிடும் போட்டியில் 3 நிமிடத்தில் 3.6 கிலோ தயிரைச் சாப்பிட்டு முதியவர் சாதனை படைத்துள்ளார்.
தயிர் சாப்பிடும் போட்டி
பீகார் மாநிலம் பாட்னாவில் ஆண்டுதோறும் தயிர் சாப்பிடும் போட்டி நடைபெறுவதுடன், இந்த ஆண்டும் கடந்த புதன் கிழமை இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியில் கலந்துகொள்ள 700 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 500 பேருக்கு மேல் போட்டியில் பங்கேற்றார்கள். மேலும் குறித்த போட்டியில் பீகார் மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இருந்து கலந்து கொண்டுள்ளனர்.
வெறும் 3 நிமிடத்தில் அதிகப்படியான தயிரை சாப்பிடுபவர்கள் வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவர். இதில் பிரேமா திவாரி என்ற பெண் 2.718 கிலோ தயிரை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றுள்ளார். ஆண்கள் பிரிவில் அஜய்குமார் என்பவர் 3.420 கிராம் தயிரை சாப்பிட்டு பரிசை பெற்றார்.
இதே போன்று முத்த குடிமக்கள் பிரிவில் பிரனாய் சங்கர் காந்த் என்பவர் மூன்றே நிமிடத்தில் 3.647 கிலோ தயிரைச் சாப்பிட்டு வெற்றி பெற்றுள்ளார்.