திருமண வீட்டில் குழிதோண்டி புதைக்கப்பட்ட கலாச்சாரம்... நாகரீகம் என்ற அரங்கேறிய நிகழ்வை நீங்களே பாருங்க
பொதுவாக திருமண விழாவில் வாழை இலை போட்டு விருந்து வைக்கும் பழக்கம் தமிழர்களிடையே காலம் காலமாக இருந்து வருகின்றது. அதிலும் தல வாழை இலையில் அவியல், பொரியல், கூட்டு என வைத்து சாப்பிடுவதே ரொம்ப நன்றாக இருக்கும். இதனாலேயே திருமண வீடுகள் அழகாகும். திருமண பந்தியில் நுழைந்து இலை போட்டு, அதில் தண்ணீர் தெளித்து இலையைத் துடைப்பது தான் வழக்கம்.
ஆனால் குறித்த இந்தத் திருமணத்தில் கலாச்சாரத்தையே உடைத்துவிட்டனர். ஆம். இலையில் தண்ணீர் தெளிப்பதற்குப் பதில் டிஸ்யூ பேப்பர் வைக்கிறார்கள். திருமண விருந்துக்கு வந்திருப்போரும் அந்த பேப்பரை எடுத்து அதில் இருக்கும் இலையை சுத்தம் செய்யும் வைப்ஸ் மூலம் இலையை சுத்தம் செய்கின்றனர். பணம் நிறைய இருக்கலாம்.
அதே நேரம் ஆடம்பரம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு இலையை சுத்தம் செய்ய தண்ணீரை விடாமல் வைப்ஸ் வைப்பது சரியா? இது நம் கலாச்சாரத்தையே அழித்துவிடாதா? என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.