அச்சு அசலாக சாவித்ரியாக மாறிய சீரியல் நடிகை! கீர்த்தி சுரேஷையும் மிஞ்சி விட்டார் போல
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகர் திலகம் சாவித்ரி நடிப்பைப் பற்றி யாருக்கும் கூற வேண்டிய அவசியமே இல்லை.
இந்த நிலையில் சீரியல் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் சாவித்ரி போல மேக்கப் செய்துள்ளார்.
ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன் பின்னரும் ’குஷி’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்துள்ள ரேஷ்மா வெங்கடேஷ், சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளவர்.

இந்த நிலையில் ரேஷ்மா வெங்கடேஷ் சமீபத்தில் சாவித்ரி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்தில் எனது குரு சாவித்ரி அம்மா கெட்டப்பில் இருப்பதற்குத்தான் பெருமைப்படுகிறேன் என்றும் சாவித்ரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்த்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தனது நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார்.
பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.