நடிகை ரம்யாகிருஷ்ணன் சொத்து மதிப்பு இதோ... வாயடைத்துப் போன நெட்டிசன்கள்
நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது ஜெயிலர் படத்தில் மாஸ் காட்டியுள்ள நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரம்யா கிருஷ்ணன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கலக்கிவருகின்றார். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், பிரபல ரிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்தார்.
பின்பு சீரியலிலும் வலம்வந்து மக்களை கவர்ந்த இவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இவ்வாறு தனது வேலையில் பயங்கர பிஷியாக இருந்து வரும் நடிகை ரம்யாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.98 கோடி என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |