புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா - 55 வயதில் இப்படி மாறிட்டாரே!
புற்றுநோயில் இருந்து மீண்டு தற்போது 55 வயதில் உடலை ஃபிட்டாக வைத்த்திருக்கும் நடிகை மனிஷா கொய்ராலா பற்றி பார்கலாம்.

மனிஷா கொய்ராலா
மனிஷா கொய்ராலா நேபாள அரச குடும்ப பின்னணியை கொண்டவர். இவர் தமிழில் 'பம்பாய்', 'இந்தியன்' மற்றும் 'ஆளவந்தான்', 'முதல்வன்', 'பாபா', 'உயிரே' போன்ற படங்களை நடித்துள்ளார்.
இவர் நடித்த ஒவ்வொரு படங்களிலும் அவருடைய கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் இன்றும் நிற்கும் சிறப்பு பெற்றுள்ளது. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவருக்கு 20212 ம ஆண்டு கருப்பை புற்றுநோய் வந்துள்ளது. இதற்கு அவர் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த புற்றுநோயில் இருந்து 2014ம் ஆண்டு சிகிச்சை பெற்று மீண்டுள்ளார். இதன் பிின்னர் பல பேட்டிகளில் இந்த புற்றுநோய் பற்றி பேசி இருந்தார்.

பேட்டியில் பேசியது
மனிஷா பேசும் போது “புற்றுநோயால் போராடிய எனக்குக் கடவுள் அருளால் இரண்டாவது வாழ்க்கை கிடைத்திருக்கிறது. வாழ்க்கையில் நான் அடிமட்டத்துக்குச் சென்று இருக்கிறேன்.
அதோடு, சில தவறான முடிவுகளையும் எடுத்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையானது ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட நல்ல ஆசிரியராக இருக்கிறது” என கூறி இருந்தார்.

இதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் மீண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் அவருடைய 55 வயதில் அவர் செய்யும் பிட்னஸ் தற்போது இணையத்தில் வெளியாகி மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இவர் ஜிம்மில் தீவிர உடற்பயிற்ச்சி செய்வது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதை பார்த்த இணையவாசிகள் மனிஷாவின் பிட்னஸ் இற்றும் தைரியத்திற்கும் பாராட்டி வருகின்றனர்.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |