கோப்பையை வெல்லும் தோனி படை!!! CSKக்கு வெற்றி- பிரபல ஜோதிடரின் கணிப்பு
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெறும் என பிரபல ஜோதிடர் கணித்து கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியால் ப்ளே ஆஃபிற்கு தகுதி பெற்று அசத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
அதே போல், இந்த தொடரின் முதல் பாதியில் மிக மோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், துபாயில் நடைபெற்று வரும் இரண்டாம் பாதியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல், இரண்டாவது குவாலிபயர் போட்டியில் டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று (அக்.,15) நடைபெற உள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
கொல்கத்தா அணி இதுவரை 2 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று முறையும் வென்றுள்ளது. இரு அணியின் கேப்டனுமே தங்களது அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்த நாயகர்கள் என்பதால் இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெறித்தமாக காத்துள்ளது.
ரசிகர்களை போலவே இறுதி போட்டிக்காக காத்திருக்கும் முன்னாள் வீரர்கள் பலர், இந்த போட்டி குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவதோடு, எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல ஜோதிடரான சுவாமிநாதன், சென்னை அணியே கோப்பையை கைப்பற்றும் என கூறியிருப்பதால் ரசிகர்கள் படு உற்சாகமடைந்துள்ளனர்.