சிஎஸ்கே வீரர் சின்ன தல வீட்டில் ஏற்பட்ட சோகம்! ஆறுதல் கூறும் ரசிகர்கள்;
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோகசந்த் ரெய்னா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
இந்திய அணியில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர் சுரேஷ் ரெய்னா. முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்த ரெய்னா கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், ரெய்னாவின் தந்தை திரிலோகசந்த் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். அவருடைய பூர்வீக ஊர் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெய்னாவாரி என்ற கிராமம் ஆகும்.
அவர் ராணுவ தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காசியாபாத் நகரில் உள்ள இல்லத்தில் அவர் தங்கியிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
