இறுதிபோட்டியில் கொல்கத்தாவை வீழ்த்த தோனி போட்ட மாஸ்டர் ப்ளான்! சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11 இதுதானாம்;
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இதையடுத்து, ஐபிஎல் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளுமே கோப்பையை வென்றவை ஆகும். சென்னை அணி இதுவரை 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பெங்களூரு அணி வெளியேறியதை அடுத்து, கடந்த போட்டியில், கொல்கத்தாவிடம் கடைசி ஓவரில் டெல்லி அணி தோல்வியை தழுவி வெளியேறியது.
இதனிடையே, பலம் வாய்ந்த சென்னை மற்றும் கொல்கத்தா இரு அணிகளில் எந்த அணி கோப்பையை தக்க வைக்கும் என்பதில் மிகுந்த ஆர்வம் எழுகிறது.
இந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி, சிஎஸ்கேவை விட சற்று கை ஓங்கியுள்ளது. கொல்கத்தா அணி தொடர்ந்து வெற்றி பாதையை கூர்மை படுத்திக்கொண்டே வந்துள்ளது.
இந்நிலையில், சென்னை அணியில் பவுலிங் தொடர்ந்து கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதால், பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை வீழ்த்த தோனி என்ன செய்யப்போகிறார் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதனிடையே, ப்ளேயிங் 11-க்காக தோனி போட்டு வைத்துள்ள திட்டம் தெரியவந்துள்ளது. தோனியை பொறுத்தவரை எப்போதுமே வெற்றி அணியை பெரியளவில் மாற்றமாட்டார்.
வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார். எனினும் இது முக்கியப்போட்டியாக இருப்பதால் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் பேட்டிங்கில் தான் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டு வருகிறார்.
ஏனென்றால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு படு சிறப்பாக அமைந்துள்ளது. எனவே மிடில் ஆர்டரில் அடி வாங்கும் சென்னை அணியில், சுரேஷ் ரெய்னா கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொயீன் அலி சொதப்புவதால், அவருக்கு பதிலாக ரெய்னா கொண்டு வரப்படலாம். மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லை.
சென்னை அணி 11
ருதுராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ், ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஹாசல்வுட்