பீல்டிங் செய்துகொண்டிருந்த டூ பிளிசிஸை கூப்பிட்டு விசிலடித்து கொண்டாடிய மகள்- இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!
ஐபிஎல் மேட்சின் 50வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விளாசிய 40 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இதையடுத்து, 137 ரன்கள் கொண்ட எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க இறுதி வரை களத்தில் இருந்த சிம்ரான் ஹெட்மியர் ஹேசில்வுட் வீசிய 18.4 ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்க விட்டு ஆட்டத்தில் டெல்லி அணியின் வெற்றியை பிரகாசமாக்கினார். எனவே டெல்லி அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைபட்டது.
கடைசி 6 பந்துகளை வீச வந்த பிராவோ முதலிரண்டு பந்துகளிலேயே 4 ரன்களை வாரிக்கொடுத்து 3வது பந்தில் அக்சர் படேலின் விக்கெட்டை எடுத்தார். தொடர்ந்து, டெல்லியின் ககிசோ ரபாடா பிராவோ வீசிய 4-வது பந்தில் பவுண்டரி விளாசினார்.
எனவே 137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டியின் போது மைதனாத்தில், பீல்டிங் நின்று கொண்டிருந்த சென்னை வீரர் டூ பிளிசிஸை பார்த்து அவரது மகள், அப்பா என கூப்பிட்டு விசிலை காட்டியது. அதற்கு டூ பிளிஸும் அமைதியாக இரு என்பதுபோல் கை காட்டினார்..
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது,.
Cutest Video of the day ??#WhistlePodu | @ChennaiIPLpic.twitter.com/lkjC774qzC
— CSK Fans Army™ ? (@CSKFansArmy) October 5, 2021