Cryptocurrency மதிப்பு கடும் வீழ்ச்சி: இந்திய அரசின் அதிரடி அறிவிப்பால் ஏற்பட்ட திருப்பம்
இந்தியாவில் அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதுடன், ரிசர்வ் வங்கி சார்பில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பிட்காயின்களை வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகளவில் சமீபகாலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட தலைப்பு கிரிப்டோகரன்சி தான். டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் உட்பட மற்ற காயின்கள், அனைத்தும் மக்களிடமும் மக்களிடமே இருக்கும். எந்த ஒரு நிறுவனமும், அரசாங்கமும் இதன் உரிமைகளில் தலையிட முடியாது.
பிட்காயினில் தொடங்கிய கிரிப்டோ கரன்ஸி பயணம், இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிஜிட்டல் கரன்ஸிகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
உலகின் பல மூலைகளின் கரன்சிகள் உருவாகி வரும் இதன் மதிப்பு சிலவே நிலைத்திருக்கும் நிலையில், பல வந்த வேகத்தில் மதிப்பிழந்து விடுகின்றன. அதேபோல கிரிப்டோ கரன்சி சில புதியவர்களை பணக்காரர்களாக ஆக்கியிருந்தாலும், பலரை ஏழையாக்கியுள்ளது.
இந்த நிலையில் தான் கிரிப்டோ ஒழுங்குமுறை தொடர்பான மசோதாவை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
சமீபமாக கிரிப்டோவை பரிவர்த்தனை செய்யும் எக்ஸ்சேஞ்ச்கள் இந்தியாவில் வெகுவேகமாக பெருகிவிட்டன. அவர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இயங்குகிறார்கள்.
அவர்களிடம் கிரிப்டோ வியாபாரிகள் கொடுக்கும் பணம் முழுவதற்கும் எக்ஸ்சேஞ்ச்களே பொறுப்பு. இதனை கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கிறது.
லோக்சபா இணையதளத்தில் அதிகாரப்பூர்வ "டிஜிட்டல் கரன்சி" (Digital Currency) ஒழுங்குமுறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், தனியார் கரன்ஸிகளை தடை செய்வது குறித்தும் அல்லது அதில் பாதுகாப்பான தொழில்நுட்பத்தை மட்டும் ஏற்றுக் கொள்வது குறித்தும் மசோதா பேசும் என்று கூறியுள்ளது.
மேலும் மத்திய ரிசர்வ் வங்கி சார்பாக டிஜிட்டல் கரன்ஸி ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஒன்றிய அரசு முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த முன்னறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கரன்சிகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்தது. 10% முதல் 30% வரை இந்தியாவில் கரன்சிகள் மதிப்பு வீழ்ச்சியை கண்டுள்ளன.
கிரிப்டோ வைத்திருப்பவர்கள் ஒன்றிய அரசின் அறிவிப்பால் பயத்தில் அதனை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
