கிரிப்டோகரன்சி அடுத்த ஆண்டு எப்படி இருக்கும்? இந்தியர்கள் முதலீட்டில் இறங்கலாமா?
கிரிப்டோகரன்சி ஆனது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இது மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது.
இதனிடையே, இந்திய போன்ற நாடுகளில் இதுவரையில் முழுமையாக கிரிப்டோகரன்சியானது இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆனால், இது குறித்த விதிமுறைகள் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக இந்திய சந்தையில் தடை செய்யப்படலாம். இந்தியா அரசே புதியதாக ஒரு புதிய டிஜிட்டல் கரன்சியினை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
பல சர்வதேச நாடுகளை பொறுத்தவரையில் கிரிப்டோகரன்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது அவர்களின் மொத்த அசெட்களில் ஓரிரு சதவீதம் மட்டுமே.
ஆக முழுமையான தாக்கம் என்பது, இது ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட பின்னரே இருக்கலாம்.
அதுவரையில் இந்திய முதலீட்டாளர்கள் வணிகம் செய்யலாம். எனவே பெரிய அளவில் இந்தியர்கள் முதலீட்டில் இறங்காமல் இருப்பது தான் சிறந்தது.