கிரிப்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் என்ன வித்தியாசம்.... இதோ முழு விபரம்!
கிரிப்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கிரிப்டோ கரன்சிகள் என்பவை நிஜ நாணயங்கள் அல்ல. மாறாக, தனியாக உருவாக்கப்பட்ட சொத்துகளாக கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் நாணயங்கள் என்பது அரசாங்கத்தால் வெளியிடப்படும் நாணயத்தின் மின்னணு வடிவங்கள் ஆகும்.

கிரிப்டோகரன்ஸிகள், அல்லது டிஜிட்டல் நாணயங்கள், குறியாக்கத்தால் பாதுகாக்கப்படும் மதிப்பின் ஸ்டோர் ஆகும். இந்த டிஜிட்டல் நாணயங்கள் அனைத்தும் தனியாருக்குச் சொந்தமானவை மற்றும் உருவாக்கப்பட்டவை ஆகும்.
டிஜிட்டல் கரன்சிகளை ரிசர்வ் வங்கி போல ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியே உருவாக்குகிறது.
எனவே, இறையாண்மை கொண்ட ஒரு மத்திய வங்கியின் ஆதரவு டிஜிட்டல் கரன்சிகளுக்கு உண்டு. ஆக, கிரிப்டோ கரன்சிகளை போல அல்லாமல் டிஜிட்டல் கரன்சிகளுக்கு பாதுகாப்பு அதிகம்.

டிஜிட்டல் கரன்சிகள் சட்டமுறை அங்கீகாரத்துடன் வெளிவருவதால் அவற்றை வங்கியிலேயே சேமிக்க அனுமதி கிடைக்கும். ஆனால், சட்ட அங்கீகாரம் கிடைக்காத கிரிப்டோ கரன்சிகளை சேமிக்க தனி வாலட்டுகள் தேவைப்படும்.
டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளின் விவரங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள், அனுப்புபவர் மற்றும் பெறுபவர் விவரம் வங்கிக்கு மட்டுமே கிடைக்கும். கிரிப்டோ பரிவர்த்தனைகளின் விவரங்கள் பரவலாக்கப்பட்ட லெட்ஜர் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.
