வெளிநாட்டு காகங்கள் பேசுமா? பின்னணி காரணம் இதோ
மனிதர்கள் வாழும் இடத்தில் நாம் காகங்களை பார்த்திருப்போம். ஆனால் இவற்றை பெரும்பாலானோர் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில்லை.
மாறாக இது சனிபகவானின் வானகம் என ஜோதிட சாஷ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் இதை தெய்வமாக சிலர் பார்க்கின்றனர். ஆனால் வெளிநாட்டு காகங்கள் நம் நாட்டு காகங்களை விட மிகவும் வித்தியாசமானவை.
இந்த காகங்கள் உடல் வடிவிலும் சத்தம் மற்றும் வாழ்க்கை முறையிலும் வேறுபட்டு இருக்கின்றன. அதன் முழு விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
காகங்கள்
Crow vs Raven என இரண்டு வகையான காகங்கள் உள்ளது. தமிழ் நாட்டில் இந்த காகங்கள் தெய்வமாக பார்க்கப்படுகின்றது. ஆனால் வெளிநாட்டில் இவை வீட்டு செல்லப்பிராணிகளாக பார்க்கப்படுகின்றது.
இந்த இரண்டு வகையுமே Corvidae என்ற இனத்தை சேர்ந்தது. இவை இரண்டுமே புத்திசாலித்தனமான பறவைகள் தான். ஆனால் வெளிநாட்டில் உள்ள காகங்கள் மனிதர்களுடன் தன் உறவை வளர்த்துக்கொள்கின்றது.
இந்த காகங்கள் நம் நாட்டு காகங்களை விட மிகவும் பெரிதாக இருக்கும். இரண்டு மடங்கு பெரிய காகங்கள் அவை. அவற்றின் இறக்கையின் அளவு மட்டும் 1.5 மீட்டர் வரை இருக்குமாம்.
நம் நாட்டு காகங்களுக்கு வால் கூர்மையாக இருக்கும் ஆனால் அந்த நாட்டு காகங்களுக்கு வால் விசிறி போல பெரிதாக இருக்கும். நம் நாட்டு காகங்கள் 'காவ் காவ்' என்று கத்துகின்றன.
ஆனால் வெளிநாட்டு காக்கைகள் 'குரோங்க் க்ரோங்க்' எனப்படும் ஆழமான, கடுமையான ஒலியை எழுப்புகின்றன. சில நேரங்களில் இவை மனிதர்களை போல பேசும் என சொல்லப்படுகின்றது.
இந்தியாவில் காகங்கள் கூட்டமாகவே வாழ்கின்றன. ஒரு காகம் இருந்தால் ஒட்டுமொத்த காக கூட்டமே அங்கு ஒன்று கூடும். அப்படி கூட்டு குடும்பமாக வாழும் இனம் தான் காகம்.
ஆனால் வெளிநாடு காகங்கள் மனிதர்களுடனே நெருக்கமான உறவை பேணுகின்றன. இங்குள்ள காகங்களின் அலகு சிறியதாகவும், தட்டையாகவும் காணப்படும். ஆனால் அங்குள்ள காகங்களின் அலகு பெரியதாகவும், வளைந்ததாகவும் காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |