நொடியில் உயிர் தப்பிய டிரைவர் - கொத்துக்கொத்தாக ஓடிய ராட்சத முதலைகள் - அதிர்ச்சி வீடியோ
மின்னல் வேகத்தில் வந்த படகைப் பார்த்து கொத்துக்கொத்தாக தெறித்து ஓடிய ராட்சத முதலைகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொத்துக்கொத்தாக ஓடிய ராட்சத முதலைகள்
தினமும் ஏதாவது ஒரு நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடும். சில நேரம் அதிர்ச்சியைகூட வரவழைத்து விடும்.
அதேபோலத்தான் தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஆற்றில் மோட்டார் படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. திடீரென்று அந்த மோட்டார் படகு சென்றுக்கொண்டிருக்கையில் கொத்து கொத்தாக ராட்சத முதலைகள் கிடந்தன.
இதைப் பார்த்த அந்த மோட்டார் படகு டிரைவர் மிக வேகமாக படகை இயக்கினார். மின்னல் வேகத்தில் பறந்த அந்த படகைப் பார்த்த முதலைகள் தெறித்து ஓடின. கிட்டத்தட்ட பல மைல் தூரத்தில் ராட்சத முதலைகள் அந்த வீடியோவில் காணப்படுகின்றன.
வேகம் சிறிது நேரம் குறைத்திருந்தாலோ அல்லது அந்த படகு ஆற்றில் சிக்கி இருந்தாலோ முதலைகள் சேர்ந்து டிரைவரை தும்வம்சம் செய்திருக்கும்.
Watch a terrifying boat passage through a river 😳 pic.twitter.com/21Iakmmxvt
— OddIy Terrifying (@OTerrifying) June 1, 2023