நெருங்கி வந்த ராட்சத முதலைகளின் வாயில் உணவை போட்ட நபர் - திக்... திக்... வீடியோ!
பசி வெறியோடு நெருங்கி வந்த ராட்சத முதலைகளின் வாயில் உணவை போட்ட நபரின் திக்... திக்... வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முதலைகளின் வாயில் உணவை போட்ட நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஒரு கவரில் முதலைகள் சாப்பிடுவதற்காக இறைச்சிகளை கொண்டு வந்த நபர், குளத்தில் இருக்கும் முதலைகளின் அருகில் வந்தார். அப்போது இவரைப் பார்த்ததும் ராட்சத முதலைகள் இவரிடம் வந்தது. அப்போது, பசியோடு இருந்த முதலைகளுக்கு தன் கவரில் இருந்த உணவை எடுத்து அந்த முதலையின் வாயில் போடுகிறார். ஒவ்வொரு முதலையும் தன் வாய் திறக்கும்போது, இவர் உணவை அந்த முதலையின் வாயில் போடுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் சற்றே பதறிவிடுகிறது. ஆபத்தை அருகில் வைத்துக் கொண்டு பயமின்றி எப்படி உங்களால் இந்த முதலைகளிடம் செல்ல முடிந்தது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
I have never seen anything like this before ? pic.twitter.com/cJQ29lKJiV
— CCTV IDIOTS (@cctvidiots) April 17, 2023