முதலையின் வாயில் இருந்த மனிதரின் உடல்! அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்
குஜராத் மாநிலத்தில் ஆ்ற்றில் முதலை ஒன்று மனிதரின் உடலைக் கடித்தவாறு இருந்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
முதலையின் வாயில் மனித உடல்
குஜராத் மாநிலத்தில் பத்ரா வதோதரா நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள கிராமத்தின் அருகே ஓடும் ஆற்றில் முதலை ஒன்று மனித உடலை கடித்தபடி நீந்தியுள்ளதை சோக்தரகு கிராமத்தில் வசிப்பவர்கள் அவதானித்துள்ளனர்.
முதலையின் வாயிலிருந்த உடல் 30 வயதான இம்ரான் திவான் என்று அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த நபரை மக்கள் முதலையிடமிருந்து மீட்க முயற்சித்த போது முதலை ஆழமான நீரில் மறைந்ததாக கூறப்படுகின்றது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலை பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுக்குறித்து இம்ரானின் சகோதரர் கூறுகையில், இம்ரான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு தர்காவிற்குச் சென்றிருந்தார். அவர் தர்காவின் பாரபெட்டிலிருந்து தவறி ஆற்றில் விழுந்திருப்பார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த ஆண்டு ஜூன் மாதம், வதோதரா நகரில் விஸ்வாமித்ரி ஆற்றில் மூன்று முதலைகள் ஒரு மனிதனின் உடலைக் கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.