மீனை வேட்டையாட நினைத்த முதலை: நொடிப்பொழுதில் உயிரைவிட்ட சோகம்! நடந்தது என்ன?
மின்சார விலாங்கு மீனை வேட்டையாட நினைத்த முதலை வெறும் 10 நொடியில் உயிரிழந்துள்ள அதிர்ச்சி காட்சியினை காணலாம்.
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது மிகவும் பயங்கரமாகவும், திரில்லிங்காகவும் இருக்கும். இங்கு தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த நபரின் தூண்டிலில் மின்சார விலாங்கு சிக்கியுள்ளது.
இதனை அவதானித்த முதலை தனது பசிக்கு விலாங்கு மீனை வேட்டையாட நினைத்து காத்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென கவ்வியுள்ளது. முதலை கவ்விய தருணத்தில் குறித்த மீனிலிருந்து மின்சாரம் தாக்கப்பட்டதால், வெறும் 10 நொடியில் மின்சாரம் தாக்கி முதலை துடிதுடித்து இறந்துள்ளது.
மிகவும் ஆபத்தான மீன் இனம் தான் இந்த மின்சார விலாங்கு மீன். இது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கிட்டத்தட்ட 860 வோல்ட் மின்சாரத்தினை வெளியிடுமாம்.
இதனை அறியாத முதலை அதனை உணவாக்க நினைத்து இறுதியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.