பாகற்காய் சிப்ஸ் - கசப்பே இல்லாமல் எப்படி செய்வது? தயிர் சாதத்திற்கு சூப்பர்
வீட்டில் யாரும் பாகற்காய் சாப்பிடுவதில்லை என்றால் ஒருமுறை இப்படி செய்து கொடுங்க சிப்ஸ் போல சாப்பிடுவார்கள்.

பாகற்காய் சிப்ஸ்
பெரும்பாலும் பலர் பாகற்காய் என்றாலே முகம் சுழிப்பார்கள். இது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தான் காரணம் இது சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக இருக்கும்.
ஆனால் இந்த பாகற்காயில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால் கசப்பு தெரியாதவாறு பாகற்காயை சிப்ஸ் செய்து சாப்பிட கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்
பாகற்காய்: 250 கிராம்
கடலை மாவு: 3 மேசைக்கரண்டி
அரிசி மாவு: 2 மேசைக்கரண்டி
சோள மாவு: 1 மேசைக்கரண்டி
மசாலாப் பொருட்கள்: மஞ்சள், மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு மாங்காய்த்தூள் அல்லது
எலுமிச்சை சாறு: 1 தேக்கரண்டி (கசப்பைக் குறைக்க)
எண்ணெய்: பொரிப்பதற்கு

தயாரிக்கும் முறை
முதலில் பாகற்காய்களைக் கழுவி, மிகவும் மெல்லிய வட்டங்களாக வெட்டவும். அவற்றில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைத் தடவி, 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
பின்னர் பாகற்காய்களை மெதுவாகப் பிழிந்து, சுத்தமான நீரில் கழுவி தண்ணீரை வடிகட்டி எடுக்கவும்.
பின்னர் ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.

சிவப்பு மிளகாய், மஞ்சள், தனியா தூள் மற்றும் மாங்காய்த் தூள் போன்ற அனைத்துமசாலாப் பொருட்களையும் சேர்க்கவும். இப்போது, கழுவிய பாகற்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.
பின்னர் சிறிதளவு அதாவது துளியளவு தண்ணீர் ஊற்றவும். மசாலாப் பொருட்கள் பாகற்காயில் நன்றாக ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு மட்டும் தண்ணீர் இருந்தால் போதும்.
பின்னர் கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், தீயை மிதமான அளவில் குறைக்கவும். அதில் பாகற்காய் துண்டுகளை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.

ஒரே நேரத்தில் அதிக துண்டுகளைச் சேர்க்க வேண்டாம் இப்படி செய்தால் அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும்.
பொரித்த பிறகு, அதிகப்படியான எண்ணெயை அகற்ற பேப்பரில் வைத்து எண்ணெயை வடிய விடவும். பொன்னிறமாக பொறித்து எடுப்பது அவசியம். பின்னர் மொறுமொறுப்பான சிப்ஸ்களின் மேல் சிறிதளவு சாட் மசாலாவைத் தூவவும். அவ்வளவுதான் சிப்ஸ் தயார்.