இதுவே எனது உலகம்: கிரிக்கெட் வீரர் நடராஜன் வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்
கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு, தனது உலகம் என்று வாசகம் எழுதியுள்ளது தீயாய் பரவி வருகின்றது.
தமிழ்நாட்டின், சேலத்தை சேர்ந்த நடராஜன் கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்ற போது அறிமுக வீரராக களம் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாகவும் சிறந்த பவுலராகவும் உருவெடுத்துள்ள நடராஜனை ‘யார்க்கர் கிங்’ என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.
இவர் ஜுன் 2018ம் ஆண்டு பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்ததோடு, தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சமீபத்தில் இவர் விளையாடும் போது காலில் ஏற்பட்ட காரணம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்த இவர், மீண்டும் எண்ட்ரி ஆக உள்ளார்.
இந்நிலையில், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனைவி குழந்தை புகைப்படத்தை பதிவிட்டு வரும் நடராஜன், தற்போதும் தனது குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலான நிலையில், பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.