தமிழ் பெண்ணுடன் காதல்... இந்திய பாரம்பரியப்படி அதிரடி ஆட்டக்காருக்கு நடந்த நிச்சயதார்த்தம்!
இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண்ணை ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் மணக்க உள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்.
இவர் சமீபத்தில் தமக்கும் மனரீதியான பிரச்சனை இருப்பதாகவும், இதையடுத்து, தனக்கு ஓய்வு வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, அவரது பெயர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. ஆனாலும், அவர் அங்கு நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.
சமீபத்தில், மேக்ஸ்வெல்லுக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினி ராமன் என்ற பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், இப்போது, மேக்ஸ்வெல்லுக்கும், வினி ராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரும் பாரம்பரிய முறைப்படி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.