கிரெடிட் கார்டு பில்லிங்கை மாற்ற சூப்பர் வசதி அறிமுகம்!
கிரெடிட் கார்ட் பயனர்களுக்கு சில விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி வங்கி வெளியிட்ட 26 பக்க விதிமுறைகளின்படி, ஒரு பகுதியாக கார்டு பயனர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்றதுபோல் ஒரு முறை மட்டும் கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சியினை மாற்றுவதற்கான ஆப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா? 4வது இடத்திற்கு போட்டிபோடும் 5 அணிகள்;
பில்லிங் தேதியை மாற்றிக்கொள்ளலாம்
இந்த பில்லிங் சுழற்சி என்பது தொடர்ச்சியான பில்களின் இறுதி தேதிகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி ஆகும்.

பில்லிங் சுழற்சி முடிந்த 15-25 நாட்களுக்கு பிறகு உங்களது பேமெண்ட்டை செலுத்த வேண்டும்.
தற்போது ஆர்பிஐ அறிவித்துள்ள சலுகைப்படி, கிரெடிட் கார்டு பயனர்கள் பண வரவுகளை பொறுத்து அவர்களின் வசதிக்கு ஏற்றதுபோல் அவர்களுக்கு ஏற்ற நாளில் பணத்தை செலுத்தி பில்லிங்கை சுழற்சியை மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, ஒவ்வொரு மாதமும் நீங்கள் 3ம் தேதிக்கு முன்னதாகவே பணம் செலுத்த விரும்பினால், அதற்கு ஏற்றது போல உங்களது கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சியை வசதிக்கேற்ப மாற்றியமைத்து கொள்ளலாம்.