சிம் கார்டு போன்று டெபிட், கிரெடிட் கார்டுகளை மாற்ற முடியுமா? ஆர்பிஐ கொடுத்த குட்நியூஸ்
நாம் அனைவரும் பயன்படுத்தும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் ப்ரீபெய்டு கார்டுகளை இந்திய வாடிக்கையாளர்கள் வேறு வேறு நெட்வொர்க்குகளுக்கு இடையே மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மாற்ற வேண்டுமா?
நாம் மொபைலுக்கு பயன்படுத்தும் சில நெட்வெர்க் சிம்மை மற்றொரு நெட்வெர்க்கிற்கு சுலபமாக மாற்றும் வசதி காணப்படுகின்றதோ, அது போன்றே வங்கியிலிருந்து நாம் பயன்படுத்தும் அட்டைகளிலும் மாற்றிக் கொள்ளலாமாம்.
அதாவது விசா, மாஸ்டர் கார்டு, ரூபே அல்லது உங்களுக்கு விருப்பமான நெட்வொர்க் இடையே மாற்றுவதற்காக விருப்பம் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாம்.
அக்டோபர் 1ம் தேதியிலிருந்து இந்த மாற்றத்திற்கான திறனை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளது.
நாம் தொலைப்பேசி எண்ணை மாற்றாமல் மற்ற நெட்வெர்க்கிற்கு நமது சிம்மை மாற்றிக் கொள்வது போன்றே இந்த வங்கி அட்டை பரிவர்த்தனையும் காணப்படும்.
இதன் மூலம் வங்கியிலிருக்கும் இருப்புகள், அட்டை கணக்குகள் கிரெடிட் வரலாறு என அனைத்தையும் இடையூறு இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் கார்டு விண்ணப்பிக்கும் போது நெட்வொர்க் வாடிக்கையாளரால் தெரிவு செய்யப்படாமல் படாமல், நெட்வொர்க் வழங்குநரின் தெரிவுனாலே மாற்றப்படும்.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அட்டை நெட்வொர்க்குகளில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன், டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் லிமிடெட், மாஸ்டர்கார்டு ஆசியா/பசிபிக் பிடீ ஆகியவை அடங்கும்.
மேலும் உங்களிடமிருந்து எந்த உள்ளீடும் இல்லாமல் விசா, மாஸ்டர்கார்டு, டைனர்ஸ் கிளப் அல்லது ரூபே பிராண்டிங் கொண்ட கார்டைப் பெறுவீர்கள். இருப்பினும், இந்த நடைமுறை விரைவில் மாற்றப்படஉள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நெட்வொர்க்கை தெரிவு செய்யும் சுதந்திரம் இனி உள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு வரைவு சுற்றறிக்கையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற அட்டை வழங்குபவர்களுக்கு RBI அறிவுறுத்தியது, வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு விருப்பங்களை வழங்கவும் மற்றும் அவர்களின் கார்டுகளுக்கு அவர்கள் விரும்பும் நெட்வொர்க் வழங்குநரைத் தேர்வுசெய்ய அனுமதிக்கவும்.
மேலும் பல விருப்பங்களிலிருந்து ஒரு அட்டை நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்க தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குமாறு அட்டை வழங்குபவர்களிடம் கோரியுள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த தேர்வை அட்டை வழங்கும் நேரத்திலோ அல்லது பிற்காலத்திலோ பயன்படுத்தலாம் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |