காத்திருந்து மீனை துல்லியமாக வேட்டையாடும் கொக்கு... டிக் டிக் நிமிடங்கள்...!
காத்திருந்து மீனை துல்லியமாக வேட்டையாடும் கொக்கின் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பறவைகள் இயற்கையின் விந்தையை பறைசாற்றுகளின்றன. ஒடு மீன் ஓட உறுமீன் வரும் வரையில் காத்திருக்குமாம் கொக்கு என்று ஔவையார் அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பவர்களை குறைத்து எடை போட கூடாது என்பதற்கு கொக்கின் தன்மையை தான் ஒப்பிட்டிருப்பார்.
அதாவது கொக்கு மீனை பிடிக்க காத்திருக்கும் போது ஒற்றைக் காலில் பேசாமல் நின்று கொண்டிருக்கும். அது பேசாமல் நிற்பது கண்டு சின்னச் சின்ன மீன்கள் அதைச் சுற்றி இப்படியும் அப்படியும் ஓடிக் கொண்டிருக்கும்.
சுற்றி வரும் மீன்களிலே எது பெரியது என்று தேர்ந்தெடுக்கும் வரை கொக்கு பேசாமல் நின்றிருக்கும். ஒரு பெரிய மீன் அருகே வரும் போது சற்றும் தாமதிக்காது பாய்ந்து அதன் அலகினால் அதைக் கொத்தி எடுத்து சாப்பிட்டுவிடும்.
இதனை கண்கூடாக காட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன், பலரது விருப்பங்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |