பசுப்பால், பாதாம் பால் இதில் எது ஊட்டச்சத்து நிறைந்தது? நிபுணர் விளக்கம்
பால் ஒரு ஊட்டச்சத்து சக்தியாகும், இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12, கால்சியம் மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதில் இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.இது பொதுவாக பசும்பாலை அடிப்படையாக வைத்து கூறப்படுகின்றது.
ஆனால் இந்த பதிவில் பாதாம் பாலுக்கும் பசும்பாலுக்கும் என்ன ஊட்டச்சத்து வித்தியாசங்கள் இருக்கின்றது என்பதை இதில் பார்க்க முடியும். இதை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பசுப் பால் vs பாதாம் பால்
பாதாம் பாலிலும் பசும் பாலிலும் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பசுப்பாலில் சிறந்த ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது. ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது.
இது தவிர வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக கால்சியம், வைட்டமின் டி மற்றும் பி வைட்டமின்கள் காணப்படுகின்றது. ஆனால் பாதாம் பால் ஒரு கோப்பை எடுத்துக்கொண்டால் அதில் 1 கிராம் புரதம் மட்டுமே உள்ளது.
ஆனால் அதிகமான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளது. பசுப்பால் ஒரு கிளாசில் 122 கலோரிகள் உள்ளன. ஆனால் பாதாம் பாலில் 40 கலோரிகள் மட்டுமே காணப்படுகின்றன.
குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க உதவும். பசும்பாலில் அதிக கலோரிகள் இருப்பதால் இதை பெரியவர்கள் குழந்தைகள் உட்கொள்ளலாம்.
இதய நோய் இருப்பவர்கள் பாதாம் பால் குடிக்கலாம் இதில் நிறைவுறா கொழுப்பு மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் இது இதய ஆராக்கியத்தை பாதுகாக்கிறது.
பல நபர்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை அல்லது பால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு பாதாம் பால் ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம். இதற்கு காரணம் இதில் இயற்கையாகவே லாக்டோஸ் இல்லை.
சைவ உணவை விரும்புவோர் பாதாம் பாலை குடிக்கலாம். எனவே இந்த இரண்டு பால் வகைகளும் ஒவ்வொன்றிற்கு சிறப்பான பலன்களை தருகிறது. இதன் மூலம் யார் எந்த பாலை குடிக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |