முற்றத்தில் மாட்டுச் சாணம் தெளிப்பது ஏன்? பாரம்பரியத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
பொதுவாக தமிழர்களின் கலாச்சாரத்தின்படி, வீட்டு வாசலில் மாட்டு சாணம் தெளிப்பதை வழக்கமாக செய்து வருகிறார்கள்.
இப்படி வீட்டு வாசலில் பசுவின் சாணத்தை தெளிப்பது என்பது பல்வேறு கலாச்சாரங்களின் நம்பிக்கையாக உள்ளது. மாட்டு சாணத்தில் ஆன்டி-மைக்ரோபியல் (antimicrobial) குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இது சூழலிலுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கிருமிகளை அழிக்க உதவுகிறது. நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்குள்ள விஷ அணுக்களுடன் வீட்டுக்கு வரும் பொழுது வீட்டு வாசலில் இருக்கும் சாணம் இவற்றை உள்ளே செல்லவிடாமல் தடுக்கிறது.
சிலர் மாட்டுச் சாணத்தை வீட்டுத்தரையை மெழுகுவார்கள். இது கிருமிகளை அழித்து சுத்தமான சூழலை எமக்கு தருகிறது. அதிலும் குறிப்பாக, இந்தியாவின் சில கிராமப்புறங்களில் வேரூன்றிய ஒரு நடைமுறையாக இருக்கிறது.
அந்த வகையில் மாட்டு சாணம் வீட்டு முற்றத்தில் தெளிப்பதற்கான காரணங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
மாட்டு சாணத்தின் பயன்பாடுகள்
1. பசுவின் சாணம் இயற்கையான சுத்திகரிப்பாளராக செயற்படும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இதனை கிராம மக்கள் இயற்கை கிருமிநாசினியாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக தான் வீட்டு முற்றத்தில் காலையில் எழுந்தவுடன் சாணம் போட்டு மெழுகுகிறார்கள்.
Rasipalan:100 ஆண்டுக்கு பின் நடக்கும் செவ்வாய்-ராகு பெயர்ச்சி.. டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்
2. இந்து மதத்தில், பசு ஒரு புனித விலங்காக பார்க்கப்படுகின்றது. சாணம் தூய்மையானதாகவும், மங்களகரமானதாகவும் கருதுகிறார்கள். இதன் காரணமாக சடங்குகள் மற்றும் வீட்டு சுப காரியங்களுக்காக பசுவின் சாணத்தை தமிழர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
3. பசுவின் சாணம் மக்கும் தன்மையுடையது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இது இரசாயன கிருமிநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகளுக்கு இயற்கையான மற்றும் நிலையான மாற்று பொருளாக அமைகிறது. அத்துடன் பருவநிலை மாற்றத்திற்கும், நிலத்தின் பசியை பராமரிப்பதற்கும் உதவியாக உள்ளது.
4. வீட்டு முற்றத்திற்கு சாணம் தெளிக்கும் நடைமுறை பெரும்பாலும் தலைமுறைகள் வழியாக பின்பற்றி வருகின்றனர். இது மூதாதையர்களின் வாழ்க்கை முறைகளுடனான தொடர்பை பிரதிப்பலிக்கிறது. ஆரோக்கியம், சூழல் பராமரிப்பு என இரண்டிலும் முக்கிய பங்காற்றுவதால் அவர்கள் மீதுள்ள மரியாதையும் அதிகரிக்கிறது. இதனால் சிலர் சாணம் இருந்தால் செருப்பை கழட்டி விட்டு தான் நடப்பார்கள்.
5. மாட்டு சாணம் சிறந்த இயற்கை உரமாக பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதனை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் பயிர்கள் ஆரோக்கியமாக வளரும். ஏனெனின் மாட்டு சாணத்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம் போன்ற மூலப்பொருட்கள் உள்ளன. இது பயிர்களின் வளத்தை அதிகரித்து உடலுக்கு வரும் ஆரோக்கிய குறைபாடுகளை தடுக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |