ரோஜா செடி கொத்து கொத்தாக பூக்கணுமா? மாட்டு சாணத்துடன் இதை சேர்த்தால் போதும்
ரோஜா செடிகள் எந்த காலநிலையிலும் செழித்து வளர மாட்டுசாணத்துடன் இன்னுமொரு உரத்தை ஊற வைத்து சேர்க்கும் போது ரோஜா பூக்கள் அளவில்லாமல் பூக்கும்.
ரோஜா செடி உரம்
ரோஜா செடிகள் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இதனாலேயே மக்கள் இதை வளர்க்க ஆசைப்படுகிறார்கள். இந்த செடிகளுக்கு அழகை கொடுப்பது அவற்றின் பூக்கள் தான்.
சில ரோஜா செடிகள் பூக்கும் தன்மை குறைவாக காணப்படும். அப்படி காணப்படுபவைகளுக்கு நாம் உரத்தை தயாரித்து போட வேண்டும். இப்படி செய்தால் பூக்கள் பூப்பதற்கு அளவே இல்லாமல் பூக்கும்.
ரோஜா செடிகளுக்கு பலரும் மாட்டு சாண உரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், இந்த கோடையில் மாட்டு சாண உரத்தைப் பயன்படுத்துவதுடன் இன்னுமொரு உரத்தையும் பயன்படுத்தலாம். மாட்டு சாணத்தை தவிர்து விட்டு இந்த உரத்தை மட்டும் பயன்படத்தினாலும் போதும்.
அந்த உரம் தான் மண்புழு உரம். நீங்கள் மண்புழு உரம் தயாரித்து தாவரங்களுக்குப் பயன்படுத்துவது சிறந்தது. இதற்கு 2 கைப்பிடி மண்புழு உரத்தை எடுத்து அதை ஒரு வாளி தண்ணீரில் அப்படியே ஊற வைக்கவும்.
இப்போது அதை 3-4 நாட்களுக்கு அப்படியே வைத்துவிட்டு முழு கலவையையும் ஒரு நாளைக்கு 1-2 முறை ஒரு குச்சியால் கிளறி விட வேண்டும். இதன் பின்னர் ஐந்தாவது நாள் இந்த தண்ணீரை வடிகட்டவும்.
இப்போது மண்புழு உரத்தில் ஊறவைத்த தண்ணீருடன் மூன்று மடங்கு குழாய் நீரை கலக்கவும். இந்த கலந்த தண்ணீரை ரோஜா செடிக்கு 1 முதல் 1.5 கப் வரை ஊற்ற வேண்டும்.
நாம் மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது குளிர்காலத்தில் ரோஜா செடியிலிருந்து நிறைய பூக்கள் வேண்டுமென்றால், கோடையில் செடிக்கு சரியான ஓய்வு கொடுக்க வேண்டும்.
இது தவிர செடியை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று கோடை மாதங்களில் ரோஜா செடியிலிருந்து பூக்களைப் பறிக்காமல் இருப்பது நல்லது. இந்த செயன்முறை மாறிவரும் வானிலை நிலைமைகளைச் சமாளிக்க செடிக்கு உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |