பள்ளி மாணவியை தாக்கிய மாடு: சுழற்றி தூக்கி வீசிய காட்சி (Video)
பாடசாலை சென்று வந்துக் கொண்டிருந்த மாணவியொருவர் மீது அவ்வழியில் சென்ற மாடு தாக்கி தூக்கி வீசிய சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
மாணவியை தாக்கிய மாடு
சென்னை, சூளைமேடு பகுதியில் வசித்து வரும் ஆயிஷா என்ற 9 வயது நிரம்பிய சிறுமியொருவர் பள்ளி வகுப்பு முடிந்து தன் தாயுடன் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தனர்.
அந்தவேளையில் ஒரு காலனி வழியில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்துக் கொண்டிருந்த 2 மாடுகளில் ஒன்று தன் கூறிய கொம்பால் எதிரில் வந்துக் கொண்டிருந்த குறித்த சிறுமியை தூக்கி வீசி கொடூரமாக தாக்கியிருக்கிறது.
இதனை பார்த்த அயலவர்கள் அந்த மாடை தடுத்து நிறுத்துவதற்காக பல வழிகளில் முயற்சித்தும் அந்த மாடு சிறுமியை விடாமல் தாக்கியிருக்கிறது.
பின்னர் அங்கிருந்து ஒருவர் தடியை கொண்டு அந்த மாடை அடித்து விரட்டி சிறுமியை காப்பாற்றியிருக்கிறார். இது எப்படியோ கேமாராவில் பதிவாகி தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
“WARNING: DISTURBING VISUALS”
— மகாலிங்கம் பொன்னுசாமி / Mahalingam Ponnusamy (@mahajournalist) August 10, 2023
சென்னை அரும்பாக்கம் MMDA காலனி, இளங்கோ தெருவில் நடந்த கோர சம்பவம். மாடு முட்டியதில் சிறுமி படுகாயம் : பள்ளி முடிந்து சென்ற போது நேர்ந்த சோகம். சாலையில் செல்லும் மாடுகளை கடக்கும்போது எச்சரிக்கை அவசியம். pic.twitter.com/ejcXhREZEu
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |