மாடு முட்டி தூக்கிவீசப்பட்ட சிறுமியின் தற்போதைய நிலை என்ன? மருத்துவர்கள் விளக்கம்
பள்ளி சென்று தனது தாயுடன் வீடு திரும்பிய 9வயது சிறுமியை மாடு ஒன்று கொடூரமாக தாக்கிய நிலையில், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுமியை கடுமையாக தாக்கிய மாடு
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷின் பானு, இவர் தனது 9 வயது மகள் ஆயிஷா மற்றும் 5 வயது ஆண் குழந்தையை பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர்கள் ஒரு தெரு வழியே வந்து கொண்டிருந்த போது கன்றுடன் வந்த மாடு ஒன்று கடுமையாக சிறுமியை தாக்கியுள்ளது. பயங்கர தாக்குதலுக்கு பின்பு சிறுமி அக்கம் பக்கத்தினரால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குறித்த சிறுமிக்கு தலையில் 4 தையல் போடப்பட்டுள்ள நிலையில், பயத்துடனும் காணப்படுவதால் உளவியல் மருத்துவர் மூலம் குழந்தையிடம் பேசி ஆலோசனை வழங்க உள்ளனர்.
பெற்றோர்களுடன் பேசுவது, உணவு எடுத்துக்கொள்வது என இருந்து வரும் சிறுமி இன்றே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.
மாட்டின் உரிமையாளர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |