கொரோனா ஆக்ஸிஜனுக்கு சச்சின் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உதவி! குவுயும் ஆதரவு
கொரோனா தொற்றின் இரண்டாவதுஅலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க அயல்நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் வாங்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசிற்கும் தன்னார்வல அமைப்புகளுக்கும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இளம் தொழிலதிபர்களால் தொடங்கப்பட்டுள்ள மிஷண் ஆக்சிஜன் இந்தியா என்ற திட்டத்திற்கு அவர் இந்த உதவியை செய்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், கொரோனா 2ம் அலை மருத்துவ துறையை கடும் அழுத்ததிற்கு ஆளாக்கியுள்ளது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது பெரிய பிரச்னையாக உள்ளது.
மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதை பார்த்து மனம் வலிக்கிறது. மேலும், இதற்காக இளம் தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் வாங்க திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதில் நானும் பங்காற்றியுள்ளேன். விரைவில் அவர்களது சேவை இந்தியா முழுவதும் உள்ள மருத்துமனைகளுக்கு சென்றடையும் என நம்புகிறேன்.
நான் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு என்னுடம் நீங்கள் அனைவரும் துணை இருந்தீர்கள். தற்போது கொரோனாவை எதிர்த்து போராட நாம் ஒன்றிணைந்து நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்டுடன் இணைந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளை இந்த உதவியை வழங்குகிறது. இதனால் பலரும் உதவி செய்ய முன்வருமாறு கேட்டுகொள்கின்றனர்.
— Sachin Tendulkar (@sachin_rt) April 29, 2021
Rajasthan Royals announce a contribution of over $1 milion from their owners, players and management to help with immediate support to those impacted by COVID-19. This will be implemented through @RoyalRajasthanF and @britishasiantst.
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2021
Complete details ?#RoyalsFamily