முதன் முதலில் கொரோனா இவரிடம் இருந்து தான் பரவியது! பகீர் தகவலை வெளியிட்ட விஞ்ஞானி
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகள் முழுவதும் பரவி கொண்டே தான் உள்ளது. தடுப்பூசியின் கட்டுப்பாட்டால் ஒரு சில நாடுகள் இருந்தாலும், பல நாடுகளில் முறையான தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொள்ளாததால் கொரோனாவின் தாக்கம் அதிமாகி வருகிறது.
இதனிடையே, சீனாவில் வூஹான் நகரில் உள்ள ஒருவருக்கு கரோனா பாதிப்பு முதலில் ஏற்படவில்லை எனவும், விலங்குகள் சந்தையில் உள்ள ஒருவருக்குதான் முதன் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைராலஜிஸ்ட் மைக்கேல் வொரோபி என்பவர் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் அறிவியல் பத்திரிக்கை ஒன்றில் எழுதியிருப்பதாவது, உலகில் முதல் கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் என்றும் அவர் விலங்குகள் சந்தையில் பணியாற்றியவர் என்றும் கூறியுள்ளார்.
பலரும் கொரோனா வைரஸ் பரவிய பல விதமான காரணத்தை கூறி வந்த நிலையில், இவர் கூறி இருக்கும் இந்த கருத்தால், விலங்குகளிடம் இருந்து தான் பரவியுள்ளதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேப்போல், கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி, சந்தையிலிருந்து ஒரு சந்தேகத்திற்குரிய நோய் பரவிவருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது.
மேலும், கொரோனா சந்தையில் இருந்து தான் பரவி இருக்கும் எனவும் உறுதியாக அவர் தெரிவித்ததால், முழு கவனமும் சந்தையை நோக்கி திரும்பியதாகக் கூறப்படுகிறது.