2 தடுப்பூசி செலுத்தினாலும் பூஸ்டர் தடுப்பூசி பலனளிக்காதாம்.. எச்சரித்த உலக சுகாதார மையம்!
உலகம் முழுவதும் மீண்டும் கொரொனா வைரஸ் அதிகரித்ததால், பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 38 லட்சத்து 59 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 67 லட்சத்து 24 ஆயிரத்து 893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தவிர, கொரோனா வைரசின் உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ், ஓமிக்ரோன் வைரஸ்களும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வைரஸ்களை கட்டுப்படுத்த மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகளை கட்டாயம் என அரசு எச்சரித்து வருகிறது.
ஆனால், கொரோனா வைரஸ் உருமாருமாறி மக்களை பாதிப்பதால் பல நாடுகள் 3-வது தவணை தடுப்பூசியை, பூஸ்டர் தடுப்பூசி என செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவிலும் முதியோர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் அனைத்து நாடுகளும் ஏற்கனவே 2 தவணை செலுத்திய தடுப்பூசியையே 3-வது தவணையாகவும் செலுத்தி வருகின்றன.
இதனிடையில், பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளையே மீண்டும் பயன்படுத்துவது பலன் தராது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது உள்ள தடுப்பூசிகள் ஓமிக்ரோன் வைரசுக்கு எதிராக தீர்க்கமாக செயல்படவில்லை என கூறுகின்றன. இதனால் தான் ஒமைக்ரான் காட்டுத்தீயை போல பரவி வருகிறது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களையு ஓமிக்ரோன் பாதித்து வருகிறது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட இறப்பில் இருந்து காப்பாற்றுவது மட்டும் இல்லாமல், நோய் தொற்று முதலில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதையே தடுக்கும் தடுப்பூசிகள் தான் நமக்கு தேவை.
அவற்றை தான் நாம் உருவாக்க வேண்டும்.
அதுபோன்ற தடுப்பூசிகள் நமக்கு கிடைக்கும் வரை கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும்,
அவை ஓமிக்ரோன் மற்றும் எதிர்கால மாறுபாடுகளுக்கு எதிராக உலக சுகாதார மையம் பரிந்துரைத்த அளவிலான பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.