ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து வழக்கு.., மகன்களை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கு முடியும் வரை மாதம் ரூ.3 லட்சம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க ரவி மோகனுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மகன்கள் ஆரவ் மற்றும் அயானை ரவி மோகன் சந்திப்பதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மகன்களை சந்திக்க ஆர்த்தி அனுமதிக்கவில்லை என்றும், குழந்தைகள் கார் விபத்தில் சிக்கிய தகவல்கூட தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் ரவி மோகன் வேதனை தெரிவித்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், தனது வாழ்க்கையில் பல்வேறு மனவேதனைகளையும் பொருளாதார சிரமங்களையும் சந்தித்ததாக கூறியிருந்தார்.
சம்பாதித்த பணத்தைக்கூட சுதந்திரமாக பயன்படுத்த முடியவில்லை என்றும், ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால் கூட அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வரும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என்று முன்பு கூறியிருந்த ரவி மோகனுக்கு, இந்த இடைக்கால உத்தரவு ஓரளவு ஆறுதலாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.