கோடியில் விழுந்த லொட்டரி பணம்... தம்பதிகளின் வாழ்க்கையே சோகத்தில் மாற்றிய சம்பவம்;
லொட்டரியில் பெரிய பரிசு தொகை விழுந்தும் ஒரு குடும்பம் சோகத்தில் மூழ்கிய சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ என்னும் நகரை சேர்ந்தவர் Barry. இவரது மனைவி பெயர் Jenny Chuwen. இந்த தம்பதிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன், லாட்டரியில் சுமார் 4.6 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.
இதனால், Barry மற்றும் Jenny ஆகியோர் கடும் உற்சாகத்தில் உறைந்து போனார்கள். அதுவரை, முடி திருத்துபவராக இருந்து வந்த Barry, அதன் பின்னர் தனது சலூனை ஊழியருக்கு பரிசாக கொடுத்து விட்டு, சொத்து முதலீட்டாளர் மற்றும் எஸ்டேட் தொழிலில் இறங்கி உள்ளார்.
கடனுக்கு தள்ளப்பட்ட சோகம்
தொடர்ந்து, தனது தொழில் மூலம் கொடி கட்டிப் பறந்து வந்த Barry-க்கு கடந்த 2008-ம் ஆண்டு, கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.
திடீரென தொழில் பின்னடைவை சந்தித்து, சம்பாரித்த பணம் அனைத்தையும் இழந்து பெரிய கடனுக்கு தள்ளப்பட்டார். இவரது நிறுவனங்களும் கலைக்கப்பட்ட நிலையில், தனது சொகுசு பங்களா ஒன்றையும் கடன் காரணமாக, விற்கப்படும் நிலையில் Barry தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தையும் Barry மற்றும் அவரது மனைவி Jenny நடத்தி வந்த நிலையில், அதில் வரும் பணம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வேறு பெண்ணுடன் பழக்கம்
இதனால் கணவன் மனைவி கடும் மன அழுத்ததில் இருக்க, தனது தொழிலில் பழக்கம் ஏற்பட்ட பெண் ஒருவருடனும் Barry-க்கு உறவு ஏற்பட்டுள்ளது.
இதனால், மனைவி Jenny-ஐ பிரிந்த Barry, தற்போது அந்த பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும், மனைவியுடன் மன்னிப்பு கேட்டும், ஆனால் இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர்.
ஏறக்குறைய லாட்டரி அடிப்பதற்கு முன்பிருந்த வாழ்க்கை ஒன்றிற்கே Barry திரும்பி விட்டதாகவும் தெரிகிறது.
லொட்டரியினால் ஏற்பட்ட பரிதாபம்
இதுகுறித்து அவரது நண்பர் ஒருவர் பேசுகையில், லொட்டரியை வெல்வது என்பது மகிழ்ச்சி உத்திரவாதமான ஒன்று பலர் நினைத்தாலும், ஆனால், அதை வென்றவர்களுக்கு மட்டுமே அது எப்போதும் எளிய முன்னேற்றமாக இருக்காது என கூறியுள்ளார்.
இதனால் பல கோடி லொட்டரியை வென்றும் ஒரு தம்பதிகளின் வாழ்க்கையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது.