குளியலறையில் திருமணம் செய்து கொண்ட தம்பதி... வைரலாகும் புகைப்படங்கள்
குளியலறையில் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குளியலறை திருமணம்
அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் பிரபல கடை ஒன்றின் குளியலறையில் தங்கள் திருமணத்தை சிறப்பாக நடத்தியுள்ளனர்.
HOP ஷாப்ஸ் என்ற கடையின் குளியலறையில் மணப்பெண்ணுக்கு திருமணம் செய்ய ஆசை எழுந்துள்ளது.
இவரது ஆசையை அவரது வருங்கால கணவர் நிறைவேற்றியுள்ளார். தேவாலயத்தில் திருமணம் நடப்பதை போல் குளியலறையில் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டுள்ளனர்.
இவர்களின் திருமணத்திற்காக குளியலறை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்ட பலகையில், அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திருமணப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |