வெறும் 2 தக்காளியால் பிரிந்த குடும்பம்... கணவரை விட்டு ஓட்டம் பிடித்த மனைவி
கணவர் தன்னிடம் கேட்காமல் தக்காளியை எடுத்து பயன்படுத்தியதால் மனைவி வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
தக்காளியால் பிரிந்த குடும்பம்
இந்தியாவில் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதனால் ஹொட்டல் மற்றும் வீடுகளில் தக்காளி இல்லாமல் சமையல் செய்வதை முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தக்காளியின் விலை உயர்வால் தம்பதிகள் பிரிந்துள்ள சோகமும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. ஆம் மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் ஹொட்டல் நடத்தி வருபவர் சஞ்சீவ் பர்மன். இவர் அப்பகுதியில் ஹொட்டல் வைத்து நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் மனைவி வீட்டில் வாங்கி வைத்திருந்த தக்காளியில் இரண்டு மட்டும் கடைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். இந்த விடயம் மனைவிக்கு தெரிந்து இறுதியில் பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சாதாரண வாக்குவாதமாக இருந்த இந்த சம்பவம் பின்பு, சண்டையாக மாறி மனைவி கோபத்தில் தனது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
பல இடங்களில் மனைவியை தேடியும் கிடைக்காததால் கணவர் தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விலைவாசி கடுமையாக உயர்ந்ததால் வெறும் 2 தக்காளிக்கு சண்டை வந்து கடைசியில் குடும்பமே பிரிந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |