5 வருடமாக நீடிக்கும் மர்மம்: தகவல் கொடுத்தால் 280 கோடி
5 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தம்பதியர் குறித்து தம்பதியினரின் உறவினர்கள் பொது அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்கள்.
மர்மமான முறையில் கொலை
கனடாவில் பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் பேரி ஷெர்மன் (வயது 75) மற்றும் ஹனி (வயது 70) ஆகிய இருவரும் கடந்த 201 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி நாற்காலியில் கட்டி போடப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.
இவர்களின் மரணம் குறித்து இதுவரையிலும் எவ்வித விபரமும் தெரியவரவில்லை. இதனையடுத்து பேரி ஷெர்மன் - ஹனி தம்பதியர் மர்மமான முறையில் இறந்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் அறிவித்திருந்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொது அறிவிப்பு
இந்நிலையில் இவர்களின் 5 ஆண்டு நினைவு நாளில் பேரி ஷெர்மன் - ஹனி தம்பதியரின் மகன் மற்றும் குடும்பத்தினர், பொது அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அதன்படி, பேரி மற்றும் ஹனி ஆகியோரின் மரணத்திற்கு காரணம் யார் என்பது குறித்து தகவல் கொடுத்தால் 35 மில்லயன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 280 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் என்றும் பேரி ஷெர்மனின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.