மில்லியன்ல ஒருத்தருக்கு தான் இப்படி நடக்கும்.. கோடிக்கணக்கான மக்களை ஆச்சரியப்படுத்திய குழந்தைகள்
தம்பதி ஒன்று ஒரே நேரத்தில் பிறந்த மூன்று மகன்களுக்கும் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் வசிப்பவர் கிரேக் - ஜினா டியூட்னி தம்பதி. கிரேக் என்பவருடைய மனைவியான ஜினாவுக்கு மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பொதுவாக ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் பிறப்பது வழக்கம் தான் என்றாலும், கிரேக் - ஜினா தம்பதிக்கு ஒரே மாதிரியான 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று அதிசய குழந்தைகள்
இது 200 மில்லியன் தம்பதிகளில் ஒருவருக்கு தான் நிகழும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனையடுத்து, குழந்தைகள் பிறந்த உடன் சிறப்பு மருத்துவ அறையில் 6 வாரங்களுக்கு மூன்று குழந்தைகளும் வைக்கப்பட்டு உள்ளனர்.
குருப்பெயர்ச்சி மற்றும் தமிழ் புத்தாண்டு பலன்கள்! டிரெண்டிங் ஜோதிடரின் துல்லியமான கணிப்பு
இந்நிலையில், சமீபத்தில், தனது மூன்று மகன்களான ஜிம்மி, ஜென்சன் மற்றும் ஜாக்சன் ஆகியோரின் முதல் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர். மேலும்,
இந்த தம்பதி Cheshire Triplets என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றினை துவங்கி உள்ளனர். இந்த பக்கத்தை 20,000 பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.